உணவு முறை

டல் வளர்ச்சிக்காக அறுசுவைகளுடன் கூடிய உணவு உட் கொள்கிறோம் ஒரு முறை உண்ட உணவு முற்றிலும் செரிமானம் ஆகிவிட்டதா என்று அறிந்தபின் அடுத்த வேளை உணவு உட்கொண்டால் நோய்  உண்டாகாது.


அடுத்த முறை உணவு உண்ணுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் உணவில் அளவு முறை. அவ்வாறு பசி இருந்தால் அந்த நேரத்தில் வயற்றில் உணவு இல்லாததால் உணவிலிருந்து சீவகாந்த ஆற்றலை பெற முடியவில்லை. அதனால் உடல் தானாகவே காற்றிலிருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து, பூமியின் கதிரியக்கத்திலிருந்து சீவகாந்த ஆற்றலை எடுத்து கொள்ள முடியும்.


அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. இந்த வான்காந்த அலைகள் உணவிலிருந்து வரக்கூடிய ஆற்றலைவிட தூய்மையானதாக இருக்கும் என்று ஞானியர்கள் உணர்ந்து விளக்கி உள்ளார்கள். அளவு முறையோடு எளிய உணவு உண்ணுவதையே  உணர்வாளர்கள்  மேற்கொள்ள  வேண்டும்.  எனவே ஒவ்வொருவரும் உண்ணும்  உணவுக்குத் தக்கவாறு குணங்களும் வேறுபடும்.