யோகா


ந்திய கலைகளில்  யோகக்கலை பழம்பெரும் கலையாகப் போற்றப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இக்கலைக்கு எழுத்து வடிவம் கொடுத்து. யோகசூத்திரம் அமைத்து உயிரூட்டி நிலை பெறச் செய்தவர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் ஆவார். எனவே, அவர் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். யோகக்கலையும் பதஞ்சலி யோகம் என அழைக்கப்படுகிறது.

யோகா என்ற வடமொழிச் சொல்லுக்கு இணைத்தல், ஒன்று சேர்த்தால் என்று பொருள்படும். உடலோடு உயிர் இணைந்து நிற்க வேண்டும். உயிரோடு மனம் ஒன்றுபட வேண்டும். மனதை இறைநிலையோட இணைப்பதே யோகம் என்பது அறிஞர்களின் விளக்கமாகும். இறைநிலை தெளிவில் இருந்து கொண்டு இறை நியதிகளை உணர்ந்து அவற்றிற்கு முரண்படாது, அவற்றை மதித்து, அவற்றிற்கு இசைவாக வாழ்தலே யோகம் என்பது சிறப்பு விளக்கம் ஆகும். யோகத்தில் வெற்றி பெறுவதற்கு ஆசனப் பயிற்சிகள் உதவுகின்றன.

யோகக்கலையை எட்டுப் பிரிவுகளாக பதஞ்சலி முனிவர் வகுத்தார். அவை இமயம், நியமம், ஆசனம்,  பிராணாயாமம், பிராத்தியாகாரா, தாரணா, தியானம், சமாதி எனப்படுகின்றன. அதில் மூன்றாவது அங்கமே உடலைச் சரி செய்யும் யோகாசனம். இது தியானம் செய்ய உடலை தயார் செய்வதுடன் நோய்  அணுகாமல் காக்கிறது.


யோகாசனங்கள்  உடலை இறுக்கமின்றி  வைக்க உதவுகின்றன. மேலும் இந்த ஆசனங்களைச் செய்துவிட்டு தியானம் செய்யும் பொழுது மனம் எளிதில் ஓர்மைப்படும்.

யோகாசனங்களின் பொதுவான நன்மைகள் 

  1. எந்த வதிலும் நம் விருப்பத்திற்கு  ஏற்றவாறு உடலை வளைக்கும் தன்மையை இப்பயிற்சியின் மூலம் பெறலாம்.
  2. மனா அமைதி, தன்னம்பிக்கை, வாழ்வில் வெற்றி இவற்றிக்கு ஆசான்கள் உதவுகின்றன.
  3. நோய்  வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் குணப்படுத்தவும் ஆசான்கள் உதவுகின்றன.
  4. மூச்சுக்காற்று மண்டலம், இரத்த மண்டலம், சீரண மண்டலம், நரம்பு மண்டலம் இவை சீராக இயங்க உதவுகின்றன.
  5. உடலுக்கும், உள்ளத்திற்கும் அதிக ஆற்றலைக் கொடுத்து உறுதியையும், புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன.
  6. நமது நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளைச் சீரமைத்தும், நரம்புகளை ஊக்கப்படுத்தியும் இளமை நீடிக்க உதவுகின்றன.
  7. உடலுக்கு அழகான வடிவத்தைக் கொடுக்கின்றன.
  8. இளமை காத்து வயோதிகத்தைக் தள்ளிப்போட உதவுகின்றன.
  9. உடலுக்கும், உயிருக்கும், மனதிற்கும் நல்லிணக்கம் உண்டாகும்.
  10. ஆன்மா தன் பரிபூரண நிலையை உணர்ந்து கொள்வதற்கு யோகாசனங்கள் உதவுகின்றன.