அகத்தவத்தின் பெருமை

அகத் தவத்தின் பொருள் கண்டு 
அதன் பெருமை உணர்ந்திடுவீர் !
அகத்தவமோ உயிரினிலே 
அறிவை ஒடுக்கும் பயிற்சி !
அகத் தவத்தால் மேலும் உயிர் 
அம்மாகி மெய்ப்பொருளாம்  !
அகத் தவத்தால் வீடுணர்ந்து
அமைதி பெற்று இன்புறலாம் !


அகத் தவத்தால் ஐம்புலனை அடக்கி 
அறிவறிந் திடலாம் !
அகத் தவத்தால் அறுகுணை 
ஆளுமைப் பேறடைந்திடலாம் !
அகத் தவத்தால் இல்லறத்தை 
அன்பகமாய் ஆற்றிடலாம்  !
அகத் தவத்தால் அனைத்துயிர்கள் 
அருநட்பைப் பெற்றிடலாம் !


அகத் தவத்தால்  தீவினை யகற்றும் 
அருள் நெறியே இயல்பாக்கும் !
அகத் தவமே இறைவழிப்பாடு அனைத்திலும் 
ஓர் சிறந்த முறை !
அகத் தவமே உயிர் வழிபாடு அதனை 
விளக்கும் ஒளியாம்  !
அகத் தவமே மதங்களெல்லாம் 
அடைய விரும்பும் முடிவு !