கருமையச் சரித்திரம்

உடல்பெற்ற உயிர் எதுவும் சீவனெனும் மதிப்பாம்
உயிர் என்பதோ நுண்ண விண்துகள் தொகுப்பே
உடலிலுள்ள உயிர்த்துகள்கள் சுழற்சி வினவாற்றல்
உயிர்த்துகளைச் சுற்றியுள்ள இறைவெளியில் உரச
உடலுக்குள் எழும் அலைகள் சீவகாந்த ஆற்றல்
உயிர் காந்தம் உடல் நடுவில் ஈர்ப்பு மையமாகும்
உடலுக்குள் இது சீவகாந்தக் கருமையம்
உயிர்த் தொகுப்பும், விந்துநாதம் அங்கு மையம் கொள்ளும்


உடலிலுள்ள செல்களூடு உயிர்த்துகள்கள் ஓட
உயிர்த்துகளால் உண்டாகும் காந்தம் சுழன்றோட
உடல் முழுவதும் விரைந்தோடும் காந்த சுழல் உடலில்
உரசுவதே உணர்வாகும் இவ்வுணர்வே சீவன்
உயிர் உயிர்கள் அத்தனைக்கும் பொதுவாம் இந்நீதி
உயிர்காந்தம் சம ஓட்டம் இன்ப உணர்வாகும்,
உடலில் அவ்வுயிர்காந்தம் மின்குறுக்கு ஆனால்
உணர்வாகும் துன்பம் நோய் ஒடுங்கிவிட மரணம்.


உடலியக்க அலைகளொடு புலன்மூலம் மனது
உணர்கின்ற அலைகளும் உள்கருமைய ஈர்ப்பால்
உடல் மையத்தில் சுருங்கி இருப்பாகும் இதுவே
உயிர்கட்கு வினைப்பதிவாம் அறிவாட்சித் தரமாம்
உடலிலுள்ள வினைப்பதிவை எண்ணமாய் விரிந்து
உடலியக்க ஆற்றலாக மாற்றம் மூளை செல்கள்
உடலுக்குள் கருமைய உண்மையறிந்தவரே
உலகம் பேரண்டம் இறைவெளியறிந்த அறிஞர்.