உலக சமுதாய சேவா சங்கம்





லக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ  வழி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் 1958 இல் உலக சேவா சமுதாய சங்கத்தினை ஏற்படுத்தினார்கள். இங்கு கற்று தரப்படும் பயிற்சிகளைப் பயின்று வாழ்விலே கடைப்பிடித்து வருவதன் மூலம், ஒவ்வொரு வரும் உடல் நலமும்  மனவளமும் பெற்று, அறிவிலே தெளிவுற்று மன நிறைவுடன் வாழ முடியும். தனி மனிதனிடம் அமைதி நிலவும் பொது தான், அது விரிந்து குடும்பம், சுற்றம், ஊர், உலகு என உலகெங்கும் பரவும், உலக சமுதாய சேவா சங்கத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன.

  1. எளியமுறை உடற்பயிற்சி,
  2. எளியமுறை தியானப் பயிற்சி,
  3. காயகல்பப் பயிற்சி மற்றும் 
  4. அகத்தாய்வுப் பயிற்சிகள்.

இவை தவிர சிறப்புத் தவமுறைகளும், தத்துவ விளக்கங்களும் அவ்வப்போது நடத்தப்பெறும் அகத்தாய்வுப் பயிற்சி வகுப்புகளிலும் பிரம்மஞானப் பயிற்சியிலும் கற்றுத் தரப்படுகின்றன. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ளவும், பயிற்சிகளை நேரில் கற்றுக்  கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள்.

உலக சமுதாய சேவா சங்கம் 
26,II  கடல்நோக்குச் சாலை, வால்மீகி நகர் 
திருவான்மியூர், சென்னை - 600041. 


வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா 
காயகல்பா ஆராய்ச்சி அறக்கட்டளை 
அருட்பெருஞ்சோதி  நகர், ஆழியாறு, 
பொள்ளாச்சி - 642101

www.vethathiri.edu.in

இது ஆழியாறு ஆணைக்கருகில் மலைச்சாரலில் நல்ல இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. இங்குச் சென்று தாங்கிப் பயிற்சிகள் அனைத்தும் கற்று கொள்ளலாம்.


இவை தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஆங்காங்கு  உள்ள மனவளக்கலை மன்றங்களிலும் இப்பயிற்சிகள் சிறப்பாகக் கற்று தரப்படுகின்றன.