உடற்பயிற்சி




வாழ்க்கையிலே மகிழ்ச்சியும் வெற்றியும் வேண்டுமெனில் உடல்நலம் இன்றியமையாதது. உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்ந்து, 8 வயது முதல் 80 வயதானவர்களும் பயின்று பயன்பெறக்  கூடிய எளியமுறையிலான உடற்பயிற்சித் தொடர் ஒன்றை உருவாக்கி வேதாத்திரி மகரிஷி  அவர்கள் தந்தார்கள். இந்த உடற்பயிற்சித் தொடர் ஏழு அம்சங்களைக் கொண்டது. அந்தப் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நிலைகள்  ஏழு. இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இவற்றை உடலமைப்பில் சீராக்கி நுரையீரல்கள், பிற உள்ளுறுப்புகள், முதுகெலும்பு இவற்றை முழு அளவில் இயக்கிட வகை செய்கின்றன இந்தப் பயிற்சிகள். உடற் பயிற்சிக்குத் தினமும் காலையில் மட்டும்  30 நிமிடங்கள் போதும் தவறாது தினமும் செய்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் அதிகரிக்கும்.